Thursday, September 22, 2016

ஆகாய தாமரை இலை

அன்று சிற்றுண்டிகளில் , உணவகங்களில் , மளிகை கடைகளில்,பூக்கடைகளில் எதை வாங்கினாலும் ஆகாய தாமரை இலையில் தான் மடித்து கொடுப்பார்கள்.இதற்க்கு இணையாக வாழை இலை பயன்பாட்டில்  இருந்தாலும் ..வாழை இலையை விட மிக மலிவானது தான் இந்த ஆகாய தாமரை இலை .

90 கள் வரை அல்வாவை ஆகாய தாமரை இலையில் தான் மடித்து கொடுத்தார்கள்,(இறைச்சி) கறி கடைகளில் கூட கறியை ஆகாய தாமரை இலையில் தான் மடித்து கொடுத்தார்கள்.

பிறகு நாம் தான் போகும் இடம்மெல்லாம் ஜவுத்தால் பேப்பர்ல கொடுங்க (கொடுப்பா) என்று கேட்டு வாங்கினோம் அது நம் வாழ்வுக்கு கேடு என்பது கூட  தெரியாமல்.

அந்த ஜவுத்தால் பேப்பர் , Carry bag , Cover (கவர்) என்று பல வடிவங்களில் உருமாறி கடைகளில் எது வாங்கினாலும் அதை அந்த பிளாஸ்டிக் கவரில் தான் போட்டு கொடுக்க ஆரம்பித்தார்கள்,
இன்று 2016 விடுகளில் சேமிக்கப்படும்  குப்பைகளில் வாரம் ஒருமுறை பிளாஸ்டிக் கவர்கள் மட்டும் நான்கு பிளாஸ்டிக் கூடைகள்  வருகிறது ,  அந்த பிளாஸ்டிக் குப்பைகள் பெரும்பாலும் நகர வீதிகளில் வருகிற குப்பை வண்டிகளில் ஏற்றப்பட்டு ஒரு பெரும் பிளாஸ்டிக் குப்பை மேட்டில் கொட்டப்பட்டு கொளுத்தப்படுகிறது,பிளாஸ்டிக் குப்பை தணலில் எரியும்போது அதன் பிளாஸ்டிக் துகள்கள் காற்றில் நச்சு புகையாய் கலந்து மீண்டும் நம் வீடுகள் தேடி வந்து நம் நாசி தொட்டு சுவாச பைகளில் நிரந்தரமாக படிகிறது .

ஆகாய தாமரை இலையை இழந்த  நாம் ஆகாய பிளாஸ்டிக் புகையை இன்று மனதார சுவாசிக்கிறோம்.

குளங்களும் ஏரிகளும் குட்டைகளும் காலபோக்கில் மறைய ஆகாய தாமரை வம்சமும் மெல்ல மறைய தொடங்கிவிட்டது



:- நகரத்து அகோரி